Tuesday, November 14, 2017


ஏழை மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடன் திட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு  மனுவில் கூறியிருந்ததாவது:&

பெருமாநல்லூரை சேர்ந்த ஏ.ரவி என்பவர் தன் மகனுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது மகன், பிளஸ்&2&வில் 59 சதவீத மதிப்பெண்தான் எடுத்துள்ளார். ஆனால், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும். இதனால் அவரது மகனின் விண்ணப்பத்தை நிராகரித்தோம். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ரவியின் மகனுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று 2013&ம் ஆண்டு ஜூன் 20&ந் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:&
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் விதமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடனை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த கல்விக்கடன் என்பது இலவசமாக வழங்கப்படுவதில்லை. குறைந்த வட்டியில் திருப்பிச் செலுத்தும் விதமாக கடன் வழங்கப்படுகிறது. இது, சமுதாயத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் விதமாக செயல்படும் சமூக பொறுப்புள்ள திட்டமாகும்.

இந்த திட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு உதவும் விதமாக, நியாயமான கல்விக்கட்டணத் தொகையை கடனாக வங்கிகள் வழங்க வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டது.
கல்விக்கடன் எந்தெந்த மாணவர்களுக்கு வழங்கலாம் என்பது குறித்து 2012&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27&ந் தேதி மத்திய நிதி மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தகுதிகளை நிர்ணயம் செய்து, அந்த தகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளில், கல்விக்கடன் வாங்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, இவற்றின் அடிப்படையில், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு குறையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இந்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

எதிர்மனுதாரர் ஏ.ரவியின் மகனுக்கு 2 வாரத்துக்குள் கல்விக்கடன் வழங்கும்படி வங்கியின் மேலாளருக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

courtesy: document source thanks to kalviseithigal

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024