கனமழை தொடருமா? - என்ன சொல்கிறார் பாலசந்திரன்...
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. பருவமழையின் தொடக்கத்தில் சென்னையில் சில நாள்கள் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாயின.
தாழ்வான பகுதிகளில் இன்னும் கூட தண்ணீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக சென்னையில் மேக மூட்டமாக இருக்கிறது. ஆனால், மழை பெய்யவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (நவம்பர் 12) திடீரென மழை பெய்தது. சில நிமிடங்கள் மட்டும் பெய்த நிலையில் நின்றுவிட்டது. பின்னர் இரவு 8.45-க்கு மீண்டும் மழை தொடங்கியது. நகரின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வளசரவாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர், பாலசந்திரனிடம் கேட்டோம். “தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி நகருமா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது. எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது பரந்த அளவில் பரவியிருக்கிறது. இதன் தாக்கத்தால்தான் இப்போது சென்னையில் மழை பெய்கிறது. கடலோர மாவட்டங்களிலும் மழை தொடரும்” என்றார்.
No comments:
Post a Comment