Sunday, December 17, 2017

எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை.. வருகிறது புதிய சட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை வழங்கக்கூடாது என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. ஏற்கனவே எச்-1பி விசா வழங்குவதில் நிறைய கட்டுப்பாடுகளும் சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்க அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தியர்கள் பலரின் வேலை இதன் காரணமாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டது.
தற்போது இந்த விதிமுறையை புதிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் இனி அமெரிக்காவில் இருக்கவும், வேலை பார்க்கவும் முடியாது என்று கூறப்படுகிறது.
ஒபாமா கொண்டு வந்த திட்டம்

ஒபாமா கொண்டு வந்த திட்டம்

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது 2015 வரை அமெரிக்காவில் வேலை பார்த்த இந்தியர்களுக்கு நிறைய நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்கள். மேலும் பல இந்திய பெண்கள் அமெரிக்காவில் வேலை வாங்கினார்கள்.
எதிர்ப்பு

எதிர்ப்பு

தற்போது இந்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிக்கு வேலை வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.அதாவது எச்-1பி விசா வைத்து, அங்கேயே குடியுரிமை பெற்று இருந்தாலும் அவர்களி ன் மனைவிக்கு வேலை வழங்க கூடாது. இதன் காரணமாக தற்போது அங்கு இருக்கும் பல இந்திய பெண்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
முன்னுரிமை

முன்னுரிமை

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்றாகத்தான் இந்த புதிய திருத்தமும் அறிவிக்கப்பட உள்ளது. இனி அமெரிக்க பெண்களுக்கே வேலையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் திருத்தம்

மேலும் திருத்தம்

தற்போது எச்-1பி விசா முறையில் இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மொத்தமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனால் 70,000 பெண்கள் உடனடியாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீண்ட கால பாதிப்பு அதைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 85,000 பேர் எச்-1பி விசா விண்ணப்பித்து இந்தியாவில் காத்து இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024