ஜனவரி 7இல் நீட் தேர்வு!
மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்ட மேற்படிப்பிலும் டிப்ளோமா மேற்படிப்பிலும் 153 மருத்துவக் கல்லூரிகளில் 35,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2018-19ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வுக்கு அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவர்கள் 20,000 பேர் உட்பட நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு ஆன்லைன் மூலம் வரும் ஜனவரி 7ஆம் தேதி நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 128 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment