அசைவ உணவுகளை காட்சிக்கு வைக்க தடை
Added : டிச 31, 2017 04:19 |
புதுடில்லி : மக்களின் உணர்வுகளை மதித்தும், சுகாதாரம் கருதியும், உணவகங்களில், அசைவ உணவுகளை கடைக்கு வெளியே காட்சிக்கு வைப்பதற்கு, தெற்கு டில்லி மாநகராட்சி தடை விதிக்க உள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு உள்ளது. இங்குள்ள தெற்கு டில்லி மாநகராட்சி, பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், 'உணவகங்களில் அசைவ உணவுகளை காட்சிக்கு வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்' என, பா.ஜ., கவுன்சிலர் ஒருவர் கூறினார்.
அதையேற்று, விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. இது குறித்து, மாநகராட்சி தலைவர், சிக்கா ராய் கூறியதாவது:மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், சுகாதாரம் கருதியும், உணவகங்களின் வெளியில், அசைவ உணவுகளை காட்சிக்கு வைப்பதற்கு தடை விதிக்க உள்ளோம்; இது தொடர்பாக ஏற்கனவே சட்டங்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment