Thursday, December 28, 2017

மன்னாதி மன்னன் எம்ஜிஆர்!

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்


 | Published on : 26th December 2017 02:45 PM |

B.R.பந்துலுவின் மகள் விஜயலஷ்மி...



திரை உலகின் முதல் கேமராமேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் போது எனக்கு 7 வயது, என் அம்மாவின் பின்புறமிருந்து எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்ப்பேன்.

எம்.ஜி.ஆரை வைத்து என் அப்பா ‘மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்’ படம் எடுத்துக் கொண்டிருந்த போது, 1974, அக்டோபர், 8 ஆம் தேதி காலமானார். பிரபலங்கள் அனைவரும் அவர் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்தனர். எம்.ஜி.ஆரும் வந்தார்.

அவ்வேளையில் அனைத்து சொத்துக்களும் அடமானத்திலிருந்தது. ஒன்று விஷம் வைத்து சாகனும் அல்லது கொடுக்கணும் என்ற நிலையில் எங்கள் குடும்பம் இருந்தது. அடுத்த நாள் வந்த எம்.ஜி.ஆர் அனைத்து கடன் கொடுத்தவர்களையும் அழைத்து, கடன்களுக்கு தானே பொறுப்பு, அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியதுடன்... 4 ரீல்களே முடிந்த நிலையிலிருந்த மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை தானே இலவசமாக டைரக்ட் செய்து, படத்தினை ரிலீஸ் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தார். அதில் வந்த பணத்தை வைத்து கடன் முழுதும் அடைத்தார்.
எங்களுக்குக் கடவுளும், தேவதையும் எம்.ஜி.ஆரே!

நடிகர் மோகன்ராம்



கலைவாணர் மற்றும் NSK மற்றும் நடிப்பிசைப் புலவர் K.R.ராமசாமி ஆகியோர் மறைவுக்குப் பின் எம்.ஜி.ஆர் அவர்கள் குடும்பத்தை எப்படி தூக்கி நிறுத்தினார் என்பதை அவர்கள் குடும்பத்தினரிடம் கேட்டுப்பருங்கள்.

ஞான ராஜசேகரன் IAS கூறியது..



சினிமாவில் காட்டிய எம்.ஜி ஆரும், வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் ஒன்னா இருக்காங்க.

ஒரு சம்பவம்…

எங்கள் ஊரில் ஊனமுற்ற இளைஞர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதச் சொல்லி என்னிடம் கொடுத்தார்.

எங்கம்மா இறந்துட்டாங்க, நான் நிராதரவாக இருக்கேன் எனத்தன் நிலைமையைச் சொல்லி, எனக்கு ஏதாவது பண உதவி செய்யச் சொல்லி என்னை கடிதம் எழுதச் சொன்னார். நானும் சிரித்துக் கொண்டே எழுதினேன்.
ஆனால் மாத இறுதியில் ஒரு மணி ஆர்டர் என தொடர்ந்து 10 மாதத்திற்கு வந்தது. இது ஆச்சர்யமான மனிதாபிமானம்.

இன்னொரு சம்பவம்

பூனா ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து சில மாணவர்கள் தமிழ் சினிமா உலகம் எப்படி இருக்கு? என்பதைப் பார்க்க வந்தனர். அப்போது எம்.ஜி.ஆரை பார்த்த போது, எம்.ஜி.ஆர் அவர்களிடம்...

தம்பி என்னுடைய படங்களைப் பார்த்து தமிழ் சினிமாவை முடிவு செய்யக் கூடாது... அங்கே ‘வியட்நாம் வீடு’ என்றொரு படம் ஓடுகிறது. அதில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். அநதப் படத்தைப் பாருங்கள் என்றார்.

சங்கர் கணேஷ் பேசும் போது...



என் காதல் திருமணத்தை நடத்தி வைத்து வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர். குண்டு வெடித்த பின், 3 துண்டாகப் போன என் காலை, சரி செய்ய மருத்துவர்களிடம் போராடி, நான் இன்று நடப்பதே எம்.ஜி.ஆரால், அவர் என் தெய்வம் என்றார். என் மருத்துவச் செலவையும் அவரே செய்தார்.

நன்றி: C.கோபிநாத், விஜய் டிவி

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...