Sunday, December 31, 2017

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக, அப்பலோ நிர்வாகம் 2 வாரம் அவகாசம் கோரியுள்ளது. #75dayinHospital #jeyalalithaa 
 
 விசாரணை ஆணையத்தில் ஆஜராக 2 வாரம் அவகாசம் கோரியது அப்பலோ நிர்வாகம்
சென்னை, 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தொடங்கினார்.

ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் யார் வேண்டுமானாலும் அளிக்கலாம் என அவர் அறிவித்திருந்த நிலையில் ஜெ.தீபா, மாதவன் உள்ளிட்டோரும் , திமுக திருப்பரங்குன்றம் வேட்பாளர் சரவணன் உள்ளிட்டோரும் தகவல்களை அளித்தனர். இது தவிர ஆயிரக்கணக்கானோர் தகவல் அளித்துள்ளனர்.நூற்றுக்கணக்கானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர்.

 விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜன. 2ம் தேதி ஆவணங்கள் தாக்கல் செய்யுமாறு,  சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக 2 வாரம் அவகாசம் அப்பல்லோ நிர்வாகம் கோரியுள்ளது. #inquirycommission #ApolloHospital, #75dayinHospital #jeyalalithaa

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...