Sunday, December 31, 2017

புத்தாண்டிலும் விடாது விரட்டும் ஆளுநர் பன்வாரிலால்!

சென்னை: தஞ்சாவூரில் வரும் ஜனவரி2ம் தேதி மக்கள், கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆளுநர் பன்வாரிலாலிடம் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் பதவியேற்றபின், பல்வேறு மாவட்டங்களில் அவர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக புகார்கள் எழுந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன சோதனையை தொடரந்து வரும் பன்வாரிலால், சமீபத்தில் குளியல்யறையை எட்டிப்பார்த்ததாக சர்ச்சையிலும் சிக்கினார்.

இந்நிலையில், எதைப்பற்றியும் கவலைப்படாத ஆளுநர் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஜனவரி ஒன்றாம் தேதி திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை துவக்க விழாவில் பங்கேற்கும் ஆளுநர் பன்வாரிலால், அதற்கு அடுத்த நாள் ஜனவரி 2ம் தேதி தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் மக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து மனுக்களை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய பெயரை களங்கப்படுத்த பலர் முனைப்பு காட்டி வருவதால் சுதாரித்துக்கொண்ட ஆளுநர், களத்தில் போய் பார்த்தால் தானே பாத்ரூம் எட்டிப்பார்த்தது போன்ற பிரச்சனைகள் வரும் என எண்ணி, அவருடைய தங்குமிடத்திற்கே மக்களை வரவைத்து விட்டார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆளுநர் மறைவதில்லை....புதுச்சேரி காற்று இந்த பக்கம் விரைவில் வீசும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

source: oneindia.com
 
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024