Saturday, December 30, 2017

இன்றுSMRT (1) தொடக்கம்: ரயில் பயணச் சலுகைக் கட்டணம்

SMRT (1)
இன்று முதல் வார நாட்களில் காலை 7.45 மணிக்கு முன்னர் பயணம் செய்யத் தொடங்கும்போது கட்டணங்கள் 50 காசு வரை குறையும்.
காலை உச்ச நேரத்துக்கு முந்திய இலவசப் பயணத் திட்டத்திற்குப் பதிலாக இந்தப் புதிய திட்டம் நடப்புக்கு வந்துள்ளது.

முந்திய திட்டத்தில் காலை 7.45 மணிக்கு முன்னர், குறிப்பிட்ட 18 ரயில் நிலையங்களைச் சென்றடையும் பயணிகள் மட்டுமே இலவசப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.
புதிய திட்டம் எல்லா ரயில் நிலையங்களுக்கும் பொருந்துமென பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்தது.

அதன்மூலம் சுமார் 300,000 பயணிகள் பயனடைவர். ஒப்புநோக்க, முந்திய திட்டத்தின்மூலம் சுமார் 65 ஆயிரம் பயணிகள் பயனடைந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024