Thursday, December 28, 2017

வாட்ஸ்அப்க்கு வந்துவிட்டது புதிய ஆப்பு..! வழக்கறிஞர் எச்சரிக்கை!!!

வாட்ஸ்அப் செயலில் உள்ள நடுவிரல் எமோஷனை 15 நாட்களுக்கு
நீக்க வேண்டும் இல்லை என்றால் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் சட்ட அறிவிப்பு மூலம் தெரிவித்துள்ளார்
.
வாட்ஸ்அப் செயலியில் உள்ள நடுவிரல் எமோஜியை நீக்க வேண்டும் என புதுடெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் குர்மீத் சிங் சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்தியாவில் நடுவிரல் காண்பிக்கும் முறை அவமதிப்பு, சண்டையிட தூண்டும், ஆபாசம் மற்றும் கீழ்தரமான சைகை.

இந்திய குற்றவியல் நடைமுறை பிரிவுகள் 354 மற்றும் 509 கீழ் மற்றவர்களை சண்டையிட தூண்டும், ஆபாசம் மற்றும் கீழ்தரமான சைகைகளை பயன்படுத்துவது குற்றமாகும். இந்நிலையில் வாட்ஸ்அப் செயலில் வழங்கப்பட்டுள்ள நடுவிரல் எமோஜியை சட்ட அறிவிப்பில் உள்ள தேதியில் இருந்து 15 நாட்களுக்கு நீக்க வேண்டும்.
அதை நீக்காத பட்சத்தில் இவ்விவகாரம் குறித்து குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எமோஜி வார்த்தைகளை விட உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தக்கூடியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024