Thursday, December 28, 2017

ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்

Published : 26 Dec 2017 12:58 IST

என். மகேஷ்குமார் விஜயவாடா




ஆந்திராவில், மாதம் ரூ.149க்கு தொலைபேசி இணைப்பு, இணைய தள சேவை, 250 சேனல்களுடன் தொலைபேசி இணைப்பு போன்றவை வழங்கப்பட உள்ளன. இந்த ஃபைபர் க்ரிட் சேவையை நாளை விஜயவாடாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.

தகவல் தொழில் நுட்பத்தில் அதிக நாட்டமுடையவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இவர் இரண்டு முறை பணியாற்றிய போது, ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டியை உருவாக்கினார். பல பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார். இதனால் இன்று தெலங்கானா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளன.


தற்போது ஆந்திர மாநிலம் பிரிந்தபோதும், புதிய ஆந்திர மாநிலத்தில் நவீன தகவல் தொழில் நுட்பத்துடன் தலைநகர் அமராவதியை நிர்மாணித்து வருகிறார் நாயுடு. அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களை சுமந்து கொண்டு செல்வதை தடுத்துள்ளார். மேலும், இ-கவர்னஸ் மூலம் காகிதம் இல்லாத அரசாட்சியை நடத்தி வருகிறார்.

இவர் மேற்கொள்ளும் அமைச்சரவைக் கூட்டங்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் காகிதங்கள் உபயோகிக்காமல் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமாகவும், ஐ-பேட் மூலமாகவும் மட்டுமே புள்ளி விவரங்களைக் கொண்டு விவாதிக்கப்படுகின்றன. அனைத்து அரசுத் துறையிலும் காகிதங்கள் இல்லா தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்நிலையில், சாமானிய குடிமகனின் வீட்டிற்கு இணைய தள சேவையை வழங்க வேண்டுமென்பது சந்திரபாபு நாயுடுவின் வெகு நாளைய கனவு. இதனை தற்போது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் நினைவு படுத்தி உள்ளார். இணைய தள இணைப்பு மட்டுமின்றி, தொலைபேசி இணைப்பு, மற்றும் 250 சேனல்களுடன் தொலைக்காட்சி இணைப்பையும் வழங்க உள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் குக்கிராமங்களுக்கும் இந்த பைபர் கிரேட் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை விஜயவாடாவில் தொடங்கி வைக்கிறார்.

ரூ. 149க்கு இணைய தள இணைப்பு வழங்கப்படுகிறது. 15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் அதிவேக இணைப்பாக வழங்கப்பட உள்ளது. 250க்கும் மேலான தொலைக்காட்சி சேனல்களும், வாடகை இல்லாத தொலைபேசி இணைப்பும் வழங்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மோரி கிராமத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 55 கிராமங்களில் இத்திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வரும் 2019ம் ஆண்டிற்குள் மாநிலத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இத்திட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் மேலும், 4,000 அரசுப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் பள்ளிகள் நடத்தலாம். மேலும், 6000 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு டெலி மெடிசின் மூலம் மருந்துகளை வழங்கலாம். ஸ்மார்ட் நகரங்களுக்கு மொபைல் இணைப்பு சேவையை எளிமையாக்கலாம்.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...