Sunday, December 31, 2017

கேட்டது மாமூல்... கிடைத்தது பேதி மருந்து....!

கோவை: கோவை மாநகரில் "நைட் ரவுண்ட்ஸ்'' செல்லும் போலீசார், அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட சில ஓட்டல் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் இரவு டிபன் இலவசமாக முடித்துக்கொள்கின்றனர். இட்லியில் துவங்கி பிரியாணி வரை ரவுண்ட் கட்டுகின்றனர். இதுதவிர, 'கை நீட்டுவது' தனி. கோவை பெரியகடை வீதியில் எஸ்.ஐ ஒருவர், தள்ளுவண்டி கடை ஒன்றில் ரெகுலராக இட்லி, தோசை, ஆம்லெட் என டஜன் கணக்கில் அடுக்குவது வழக்கம். அத்துடன், மாமூல் தொகையும் கேட்டு மிரட்டுவார். பின்னர், ஜீப்பில் ஏறி பறந்து விடுவார். இப்படியே தொடர்ந்ததால் மனம்உடைந்த அந்த கடைக்காரர், ஒரு முறை தோசை மாவில் பேதி மருந்து கலந்து, அந்த எஸ்.ஐக்கு முருகலாக தோசை போட்டு கொடுத்துவிட்டார். அவரும், வழக்கம்போல் வாங்கி ருசித்தார். ஆனால், சில நிமிடங்களில் வயிற்றை கலக்கியது. அடுத்த நாள் கடைக்கு வந்த அந்த எஸ்.ஐ., 'ஏம்பா.... நல்ல மாவு பயன்படுத்த மாட்டாயா....

நேற்று கொடுத்த ஐயிட்டம் சரியில்லப்பா... ஒரே பேதி...'' என புகார் கூறினார். இதற்கு அந்த கடைக்காரர், 'காசு கொடுத்து வாங்கும் ஐயிட்டம்தான் தரமாக இருக்கும் சார்'... என நக்கலாக பதில் அளித்தார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த எஸ்.ஐ., இந்த பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. மாறாக, நல்ல பிரியாணி கடை ஏதாவது இருக்கிறதா... என ேதடி அலைகிறார்.


Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024