ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டுப் பரிசு: ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.400 ரொக்கச் சலுகை
By DIN | Published on : 27th December 2017 11:38 AM |
சென்னை: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக, ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால், உங்கள் மைஜியோ செயலிக்கு உடனடியாக ரூ.400 கேஷ்பேக் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, அமேசான் பே, ஃப்ரீசார்ஜ் உள்ளிட்ட சேவைகளின் வாயிலாக ஜியோ ரீசார்ஜ் செய்யும் போது உடனடியாக ரூ.300 கேஷ்பேக் செய்யப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய மும்மடங்கு கேஷ்பேக் சலுகை ஒரு சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்ற நிலையில், டிசம்பர் 26ம் தேதி முதல் 2018 ஜனவரி 15ம் தேதி வரை இந்த கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 100% கேஷ்பேக் என்ற விளம்பரத்துடன் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், பல்வேறு இணைய வர்த்தகர்களுடன் ஜியோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஜியோ வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.2,600 மதிப்புள்ள வவுச்சர்களும் வழங்கப்பட உள்ளது. இவை அனைத்துமே குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே.
ஜியோ வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீசார்ஜ் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும், இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment