Saturday, December 30, 2017

சாங்கி விமான நிலையத்தில் புதிய துணைப் பேருந்துச் சேவை

சிங்கப்பூர்: கிழக்கு மேற்கு ரயில் பாதையின் கிழக்குப் பகுதியில் அடுத்த மாதம் ரயில் சேவைகளின் குறைவான செயல்பாட்டு நேரம் காரணமாக சாங்கி விமான நிலையப் பயணிகளுக்குப் புதிய துணைப் பேருந்துச் சேவை அறிமுகம் காணும்.

மூன்றாவது முனையத்தின் நுழைவாயில் 8-இலிருந்து பேருந்துச் சேவை புறப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தார்.

வழக்கமான பொதுப் பேருந்துச் சேவைகளின் பேருந்துகள் பயன்படுத்தப்படுவதால், அவற்றில் பயணப்பெட்டிகளை வைப்பதற்குத் தனி இடங்கள் இல்லை. அதற்குப் பதிலாக, சக்கர நாற்காலி அல்லது குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பயணப் பெட்டிகளை வைக்கலாம் என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024