Sunday, December 31, 2017

ரஜினி துவக்குவது கட்சி அல்ல., பேரவை ? இன்று அறிவிப்பு

Updated : டிச 31, 2017 00:07 | Added : டிச 30, 2017 20:46 



  சென்னை: நடிகர் ரஜினி இன்று கட்சி துவக்குவாரா ? அல்லது பேரவை துவக்கி மக்கள் சேவை செய்ய போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் பேரவை என்ற பெயரில் தனி இயக்கம் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது இன்று (டிச.,31). பத்திரிகையாளர்களை கூட்டி இதை அறிவிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ரஜினி தொடர்ந்து பல கட்டங்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். ரசிகர்களுடன் இணைந்து போட்டோவும் எடுத்து கொள்கிறார்.
கடந்த சந்திப்பின் போது போர் வரும் போது பார்க்கலாம் என்றார். இந்த வார சந்திப்பில் , " அரசியலில் நான் ஏற்கனவே இருக்கிறேன். யுத்தத்திற்கு போவது முக்கியமல்ல, ஜெயிக்கனும், இதற்கு வியூகம் முக்கியம்." வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மன்ற நிர்வாகி கருத்து

ரஜினியின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்பதை தென்மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ரஜினி ரசிகர்களின் கருத்தை கேட்டு வருகிறார். மக்களிடம் நெருங்கி பழக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என ரசிகர்களிடம் கேட்டார். முதலில் பேரவை துவக்கி அதை இயக்கமாக மாற்றி , கீழ்மட்டம் வரை நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மக்கள் பிரச்சனையை தீர்க்க அவர் பணியாற்ற வேண்டும். மக்கள் மனங்களில் இடம் பிடித்த பின்னர் அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனை ரஜினி ஏற்று கொண்டதாக தெரிகிறது.எனவே இன்று (31ம் தேதி ) முதலில் பேரவை துவக்குவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றி அவர் பின்னர் அறிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தனிக்கட்சி ஆரம்பிக்காமல் இயக்கத்தை ஆரம்பித்து மக்களிடம் களப்பணி ஆற்றுவார். அதன் பிறகு அரசியல் பிரவேசம் இருக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024