Sunday, December 31, 2017

திருக்கோஷ்டியூரில் சொர்க்கவாசல் திறப்பு

Added : டிச 31, 2017 00:07

திருப்புத்துார்;திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு பகல் பத்து, ராப்பத்து,வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் நடைபெறும். 


பகல் பத்து உற்ஸவத்தை முன்னிட்டு தினசரி காலைபதினொரு ஆழ்வார்கள், பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினர்.டிச.,28 ல் பகல் பத்து உற்ஸவம் நிறைவடைந்தது. டிச.,29ல் வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டுகாலை 9:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக திருமாமணி மண்டபத்தில் உற்ஸவர்சயன அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பின்னர் இரவு 8:00 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பல்லக்கில் நின்ற சேவையில் அருள்பாலித்தார். தொடர்ந்து தாயார் சன்னதியிலும், ஆண்டாள் சன்னதிகளில் எதிர் சேவை நடந்தது. இரவு 11:10 மணிக்குபரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் தேவியருடன் பரமபத வாசலை கடந்தருளினார்.தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது.பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. அடுத்து ஏகாதசி மண்டபத்தில் பெருமாள் பத்தி உலாத்துதலும், தென்னமரத்து வீதியில் உட்பிரகாரம் வலம் வருதலும் நடந்தது. பின்னர்தாயார் சன்னதிக்கு பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு பத்து உற்ஸவம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024