Sunday, December 31, 2017

ரஜினி முடிவுக்காக காத்திருக்கும் கமல்

Added : டிச 31, 2017 01:39 | 



  அரசியல் பிரவேசம் தொடர்பாக, ரஜினியின் இன்றைய அறிவிப்பிற்காக, நடிகர் கமல் காத்திருக்கிறார். அதைப் பொறுத்தே, அவரது வியூகங்கள் அமையும் என, தெரிகிறது.
நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக, அவரது ரசிகர்கள், பல ஆண்டாக காத்திருக்கின்றனர். இந்த சூழலில், அரசியல் கட்சி துவங்கப் போவதாக, கமல் அறிவித்தார். அரசியல் கருத்துக்களை, சமூக வலைதளங்களில் உதிர்க்கத் துவங்கினார். அதற்கு, அ.தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், 'புத்தாண்டில், தமிழக சுற்றுப்பயணம் செய்த பின், அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பேன்' என, நவ., 7ல் அறிவித்தார். பின், அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட அவர், அரசியல் கருத்துக்கள் எதுவும் கூறாமல், படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். இந்த சூழலில், சென்னையில், ஐந்து நாட்களாக ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, தன் அரசியல் பிரவேசம் குறித்து, இன்று அறிவிப்பதாக கூறியுள்ளார். அது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, அமெரிக்காவில் இருக்கும் கமல், ரஜினியின் முடிவுக்காக காத்திருக்கிறார். அவரது முடிவை பொறுத்தே, தமிழக சுற்றுப்பயணம் மற்றும் இதர அரசியல் விவகாரங்களில், கமலின் முடிவுகள் அமையும் என, தெரிகிறது.


- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024