Sunday, December 31, 2017

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் முடிவெட்டும் கட்டணம் நாளை முதல் உயர்வு முடிதிருத்துவோர் நலச்சங்கம் அறிவிப்பு. 
 
 
சென்னை,

 முடிவெட்டும் கட்டணம் நாளை முதல் உயர்வு

தமிழ்நாடு முடிதிருத்தும் அழகுகலை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத்தலைவர் வெ.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மின்கட்டண உயர்வு, கடை வாடகை உயர்வு, அழகு சாதன பொருட்கள் விலை உயர்வு, மழை பாதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வார்தா–ஒகி புயல் போன்ற சூழ்நிலைகளால் முடிவெட்டும் கட்டணத்தை உயர்த்தவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளோம். எனவே 1–ந்தேதி (நாளை) முதல் இந்த கட்டண உயர்வை எங்கள் நிலையறிந்து மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உயர்த்தப்பட்ட முடிவெட்டும் கட்டணம் வருமாறு:– (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம் உள்ளது)

வகைகள் – ஏசி வசதி இல்லாத கடை – ஏசி வசதி உள்ள கடை 

முடிவெட்டுதல் :– 110 (100) – 120 (110)

புதுமாதிரி முடி வெட்டுதல் :– 150 (120) – 175 (150)

முகமழித்தல் :– 60 (50) – 100 (75)

சிறப்பு முகமழித்தல் :– 75 (60) – 100 (75)

சிறுவர்களுக்கு முடிவெட்டுதல் :– 100 (90) – 120 (100)

சிறுமிகளுக்கு முடிவெட்டுதல் :– 110 (100) – 130 (110)

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024