குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் 2010-17 டாப் 10 படங்கள்: ஆச்சர்ய தகவல்கள்!
By எழில் |
Published on : 26th December 2017 04:34 PM
சென்னை குரோம்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற வெற்றி திரையரங்கில், கடந்த வருடம் வரை டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் இருந்த எந்திரன் படம் இந்த வருடம் கீழே இறங்கிவிட்டது.
வெற்றி திரையரங்கில் அதிகம் பேர் பார்த்த படம் என்கிற பெருமையை இந்த வருட ஏப்ரலில் வெளியான பாகுபலி 2 படம் தட்டிச்சென்றுள்ளது. 2010-ல் வெளியான எந்திரன் கடந்த ஏழு வருடங்கள் வரை முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் பாகுபலி 2 படத்தினால் அது இரண்டாம் இடத்துக்குச் சென்றுவிட்டது.
படம் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையை முன்வைத்து 2010 முதல் 2017 வரையிலான டாப் 10 பட்டியலை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பாகுபலி 2, எந்திரன் முதலிரண்டு இடங்களைப் பிடித்த நிலையில், பாகுபலி-யின் முதல் பாகம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான மெர்சல் படம் 4-ம் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் மெர்சல், துப்பாக்கி, நண்பன் என மூன்று விஜய் நடித்த படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வெற்றி திரையரங்கில் கபாலி படத்தை விடவும் தனி ஒருவன் படத்தை அதிகம் பேர் பார்த்துள்ளார்கள் என்பதும் மற்றொரு ஆச்சர்யத் தகவல்.
2010 - 2017: டாப் 10 படங்கள்
1. பாகுபலி 2
2. எந்திரன்
3. பாகுபலி
4. மெர்சல்
5. தனி ஒருவன்
6. கபாலி
7. துப்பாக்கி
8. கோ
9. மங்காத்தா
10. நண்பன்
2017 டாப் 10 படங்கள்
1. பாகுபலி 2
2. மெர்சல்
3. விக்ரம் வேதா
4. பைரவா
5. விவேகம்
6. சி3
7. தீரன்
8. கவண்
9. வேலையில்லா பட்டதாரி 2
10. வேலைக்காரன்*
No comments:
Post a Comment