Wednesday, December 27, 2017

புத்தாண்டில் ரூ.200 கோடி மது விற்பனைக்கு இலக்கு

Added : டிச 27, 2017 01:40

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 200 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய, 'டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், தன் மது கடைகளில், பீர் மற்றும், ஐ.எம்.எப்.எல்., எனப்படும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அந்த கடைகளில், தினமும், 80 கோடி ரூபாய்... விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகளும் விற்பனையாகின்றன. சபரிமலை சீசனால், இரு மாதங்களாக, டாஸ்மாக் விற்பனை குறைவாக இருந்தது.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தாண்டு புத்தாண்டு தினத்தின் போது, செல்லாத நோட்டு அறிவிப்பால், பணப்புழக்கம் குறைவாக இருந்தது. இதனால், டாஸ்மாக் கடைகளில், வழக்கமான விற்பனை தான் இருந்தது. மழை மற்றும் சபரிமலை சீசன் போன்ற காரணங்களால், நவம்பர் முதல் தற்போது வரை, மது விற்பனை சற்று குறைவாக உள்ளது. கிறிஸ்துமஸ் துவங்கி, ஆங்கில புத்தாண்டு வரை, மது விற்பனை நன்றாக இருக்கும்.
இதனால், கடைகளுக்கு, ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் அனுப்பப்பட்டு
வருகின்றன. டிச., 31 விற்பனைக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகளை, விற்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக, கூடுதலாக, 'பீர்' வகைகள் கொள்முதல் செய்யப் பட்டு, கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இப்படியும் கோரிக்கை : புத்தாண்டிற்கு, மது விலையை உயர்த்தி விற்போர் மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, சங்கத்தின் மாநில அமைப்பாளர், ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புத்தாண்டையொட்டி, வரும், 31 மற்றும், 1ம் தேதிகளில் மது விற்பனை அதிகரிக்கும். இந்த நேரத்தில் சிலர், மதுக்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வதால், மதுகுடிப்போர் பாதிக்கப்படுகின்றனர். புத்தாண்டின்போது, மதுக்களின் விலையை உயர்த்தி விற்போர் மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...