சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இராசாமணி அறிவித்துள்ளார்.
மார்கழி மாதம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பகல் பத்து இராப் பத்து உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் இறுதிநாளான வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும். இதற்காக பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஶ்ரீரங்கம் வருவார்கள். அந்தவிழா இந்த ஆண்டு, டிசம்பர் 29-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோயிலில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த பரமபத வாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்துக்கு வரும் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி ஆணையிடப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி அறிவித்துள்ளார்.
Dailyhunt
No comments:
Post a Comment