Tuesday, December 12, 2017

முதலில் படிப்பை முடியுங்கள் பிறகு போராட்டத்தில் பங்கேற்கலாம்: மாணவர்களுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை

Published : 11 Dec 2017 21:05 IST



சென்னை மாணவர்கள் முதலில் தங்கள் படிப்பை முடிக்க வேண்டும். தங்களது படிப்பை முடித்த பிறகு போராட்டங்களில் கலந்துகொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நெடுவாசல் போராட்டதை ஆதரித்து போராட அழைப்பு விடுத்தது மற்றும் துண்டு பிரசுரம் விநியோகித்தாக சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மாணவி வளர்மதி ஜூலை 13ல் கைதானார். பின்னர் அவரை ஜூலை 17-ல் குண்டர் சட்டத்தில் தமிழக அரசு சிறையில் அடைத்தது. குண்டர் சட்டத்தை எதிர்த்து வளர்மதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து வளர்மதி விடுதலையானார்.

சிறையில் இருந்த காலத்தில் விடுப்பு காலமாக இருந்ததால், தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, பின்னர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தேர்விற்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வருகைப் பதிவு குறைவாக இருந்ததால், தேர்வு முடிவுகளை வழங்க சேலம் பெரியார் பல்கலைக்கழக மறுத்ததை எதிர்த்து வளர்மதி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் வந்திருந்த வளர்மதியிடம் நீதிபதி கிருபாகரன் பல அறிவுரைகளை வழங்கினார்.வளர்மதி சில இயக்கங்களால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும், படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், படிப்பை முடித்த பிறகு இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்று அறிவுரை கூறினார். பின்னர் வளர்மதிக்கு தேர்வு முடிவுகளை வழங்க சாத்தியம் உள்ளதா என்பது குறித்து டிசம்பர் 13-ம் தேதி தெரிவிக்க வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு நீதிபதி உத்தரவிடட்டார்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024