Tuesday, December 26, 2017

அதோ அந்தப் பறவைப் போல வாழ வேண்டும்

Published : 22 Dec 2017 11:26 IST
மிது



உலகில் விந்தையான மனிதர்களுக்கு அளவே இல்லை. விலங்குகள் மீதான பாசத்தால், சிலர் விந்தையான விபரீதமான செயல்களைக்கூட செய்பவர்கள் உண்டு. அப்படி விசித்திரமான செய்கையால் உலக அளவில் பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் இங்கிலாந்தில் பிரிஸ்டல் நகரில் வசிக்கும் டெட் ரிச்சர்ட்ஸும் ஒருவர்.

இவர் ஒரு பறவைப் பிரியர். பறவையின் மீது அளவற்ற பிரியத்தால், தனது தோற்றத்தையே பறவை போல மாற்ற முடிவு செய்தவர். இதற்காக இவர் முதலில் தனது முகத்திலும் புருவங்களிலும் பறவைகளைப் போல் பச்சை குத்திக்கொண்டார்.


அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, ஓரிரு நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை மூலம் தனது காதுகளையும் அகற்றிக்கொண்டார். அடுத்து தனது மூக்கையும் பறவைகளைப் போல் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அதுவும் கிளிகள் என்றால், இவருக்கு கொள்ளைப் பிரியம். அதனால், பறவை அலங்காரங்களில் கிளி அலங்காரத்துக்கு இவர் முன்னுரிமை அளிக்கிறார். “பறவைகளுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். என்னுடைய கிளி அலங்காரத்தைப் பார்த்து என்னை பலரும் ‘டெட் பேரட்மேன்’ என்றே அழைக்கிறார்கள்.

எனக்கு உறவினர்கள் இருந்தாலும், என்னுடைய குடும்பம் பறவைகள்தான்” என்று பறவைப் புராணம் பாடுகிறார் 57 வயதான டெட் ரிச்சர்ட்ஸ்.

இதுவரை உடலில் 110 பறவை டாட்டூகளையும், முகத்தில் 56 வித்தியாசமான வளையங்களையும் பொருத்திக்கொண்டு பறவையைப்போலவே காட்சியளிக்கிறார் இந்தப் பறவைப் பிரியர்!

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...