சிங்கப்பூர் வனவிலங்குப் பூங்காக்களில் 2017இல் 540 பிறப்புகள்
12/1/2018 15:03
சிங்கப்பூர் வனவிலங்குப் பூங்காக்களில் சென்ற ஆண்டு போர்னியோ ஓராங் உத்தான், குரங்குக் குட்டி, சிறுத்தைக் குட்டி போன்ற540 விலங்குகளும் பறவைகளும் பிறந்தன.
சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் அந்தத் தகவலை வெளியிட்டது.
ஜூரோங் பறவைப் பூங்கா, சிங்கப்பூர் விலங்குத் தோட்டம், ஆற்று சஃபாரி ஆகியவற்றில் 145 பிறப்புகள் பதிவுசெய்யப்பட்டன.
அவற்றுள் கால்வாசி அருகிவரும் இனத்தைச் சேர்ந்தவை.
விலங்குகளின் பாதுகாவலர்களை காப்பகத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி பாராட்டினார்.
அவர்களின் அர்ப்பணிப்பால் கடந்த ஆண்டு சிறப்பாய் அமைந்ததாக அவர் சொன்னார்.
சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கான்ஸா என்ற குரங்குக் குட்டி பிறந்தது.
அதன் இனம் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கான்ஸாவோடு சேர்த்து சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் மொத்தம் 46 ஓராங் உத்தான் குரங்குகள் உள்ளன.
ஐந்தாண்டுக்குப் பிறகு முதல்முறையாக விலங்குத் தோட்டத்தில் வெள்ளை காண்டாமிருகமும் பிறந்தது.
2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சிறுத்தை ஒன்றும் பிறந்தது. ஜூரோங் பறவைப் பூங்காவில் சுமார் 10 ஆண்டுக்குப் பிறகு மாரு எனும் ராஜ பெங்குவின் பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment