கடன் சுமையில் தவிக்கும் ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை: மத்திய அரசு அறிவிப்பு
By DIN | Published on : 16th January 2018 11:48 AM | |
புதுதில்லி: கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியாவின் பங்குகளை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா தெரிவித்தார்.
பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. அவை 41 சர்வதேச நகரங்களையும், 72 உள்நாட்டு நகரங்களையும் இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா நிறுவனமே வைத்திருக்கிறது. இந்நிலையில், ரூ.52 ஆயிரம் கோடிக்கு அதிகமான அளவுக்கு கடன் சுமையில் சிக்கி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனால், அந்நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் 51 சதவீத பங்குகளை விற்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்தது
விற்பதற்கு முன் பணியாளர்களைக் குறைக்கும் முகமாக ஓய்வுக்குப் பின்னும் பணியாற்றி வந்த, தொழில்நுட்ப பிரிவில் இல்லாத, 400 ஒப்பந்த தொழிலாளர்கள் ஜனவரி 5-ஆம் தேதி பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஏர் இந்தியா இந்தியாவை விற்பது குறித்து பேசியுள்ள மத்திய இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா, ரூ.52 ஆயிரம் கோடிக்கும் அதிமான கடன் சுமை உள்ளதால், ஏர் இந்தியாவில் அரசின் பங்குகள் விற்கப்பட உள்ளன. அதனை நான்கு பிரித்து ஏர் இந்தியாவின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டுக்குள் விற்பனை செய்யப்பட்டுவிடும்.
மேலும் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரே நிறுவனமாக விற்கப்படும்
என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment