மத்திய பட்ஜெட் 2018-19: முக்கிய அம்சங்கள்
Published : 01 Feb 2018 10:58 IST
நெல்லை ஜெனா
2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.
நிகழ் பதிவு நிறைவுற்றது.
நிலையான கழிவு திட்டம் மீண்டும் அறிமுகம்
01.02.2018| 01.20 pm
பட்ஜெட் 2018 -19: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
* சம்பளதாரர்களுக்கு மருத்துவ மற்றும் போக்குவரத்திற்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.
* விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி.
* மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம்
* அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்து இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்
* மிக மோசமான நோய் பாதிப்புகளுக்கு ரூ. 1 லட்சம் வரை விலக்கு பெறலாம்
* சவுபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்
* உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும்
* அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்
* சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மானியம் 1.5 மடங்கு அதிகரிக்கப்படும்
* அனைத்து துறைகளிலும் 12% புதிய ஊழியர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
* தேசிய அளவில் புதிய உடல்நல பாதுகாபு திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி 5 லட்சம் ரூபாய்க்கான குடும்ப மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
* ரயில்வ திட்டங்களுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
* அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் 80,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும்
* குடியரசு தலைவரின் சம்பளம் 5 லட்சமாக உயர்த்தப்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பிக்களின் சம்பளம் உயர்த்தப்படும்.
01.02.2018| 12.50 pm
மூத்த குடிமக்களுக்கு சலுகை
மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்புக்கு 50,000 ரூபாய் வரை வட்டிக்கு வரியில்லை.
மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு தற்போது 10,000 ரூபாய் வரை மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
ரூ. 40,000 நிரந்தர கழிவு
* மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் இருந்து ரூ. 40,000 வரை நிரந்த கழிவு வழங்கப்படும்
போக்குவரத்து, மருத்துவ செலவினங்களுக்கு கழிவு பெறலாம்
01.02.2018| 12.40 pm
வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை
* தனிநபர்களுக்கான வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
* தனிநபர்களுக்கு தற்போது 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
* வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8.27 கோடியாக உயர்ந்துள்ளது.
* 2.5 லட்சம் வரை வருமான வரி இல்லை * 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5% வரி
* 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20% வரி * 10 லட்சத்திற்கு மேல் 30% வரி

கார்பரேட் வரி
* 250 கோடி ரூபாய் கொண்ட நிறுவனங்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும்.
01.02.2018| 12.27 pm
சம்பளம் உயர்வு
* குடியரசு தலைவருக்கான சம்பளம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்வு
* துணை குடியரசு தலைவர் சம்பளம் 4 லட்சமாக உயர்வு
* இதுபோல் மாநில ஆளுநர்களுக்கான சம்பளமும் உயர்த்தப்படும்.
* வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
* விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பிகள்கள் சம்பளமும் உயரும்.
01.02.2018| 12.24 pm
ஆதார்
* ஆதார் மூலம் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகின்றன.
* அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்கப்படும்.
* ஒரு லட்சம் கிராமங்கள் பைபர் ஆப்டிகல் கேபிள் மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் வைபை வசதி அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும்.
* நாடுமுழுவதும் தற்போது 124 விமான நிலையங்கள் உள்ளன. இது 5 மடங்காக உயர்த்தப்படும்.
* அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 80,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்
* காப்பீட்டு நிறுவனங்களுக்கு 1,400 கோடி வழங்கப்படும்
01.02.2018| 12.07 pm
ரயில்வே
* ரயில்வே திட்டங்களுக்கு 1.48 கோடி ரூபாய் ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளது.
* ரயில்வே தண்டவாளங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்
* மும்பை - ஆமதாபாத் அதிவேக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* 4,000 ஆளில்லா லெவல் கிராசிங் தடங்களில் ஆட்கள் நியமிக்கப்படுவர்.
* ரயில் நிலையங்களில் எஸ்கேலெட்டர் வசதி செய்து தரப்படும்.
* ரயில் நிலையங்களில் வைபை வசதி மேம்படுத்தப்படும்.
* 3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே வழிதடங்கள் மேம்படுத்தப்படும்
01.02.2018| 12.00 pm
வேலைவாய்ப்பு
* 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
* வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் வேலைக்கு சேர்ந்து 3 ஆண்டுகள் ஆனால் 8 சதவீதம் செலுத்தினால்போதும்.
* முத்ரா திட்டத்தின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
* சிறு குறு தொழில்கள் வளர்ச்சிக்கு 3,794 கோடி ரூபாய் மானிய உதவி வழங்கப்படும்.
* தேசிய அளவில் வீடு வசதி திட்டம் விரிவு படுத்தப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு
01.02.2018| 11.48 am
* நாடுமுழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
* நாடுமுழுவதும் புதிதாக 24 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்
* மூன்று நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவ கல்லூரி வீதம் அமைக்கப்படும்.
* 10 கோடி குடும்பங்கள் பயன் பெற சுகாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
* இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதி வழங்கப்படும்.
* இலவச மருத்துவ வசதி திட்டத்திற்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
01.02.2018| 11.40 am
* குஜராத் மாநிலம் வதோதராவில் ரயில்வே பல்கலை அமைக்கப்படும்
* கிராமப்புற வேலைவாய்ப்புக்கு 14.34 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 75 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும்
* 51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
* 4 கோடி கிராமபுற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு திட்டம்.
* அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கிராமப்புற கழிவறைகளுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்.
* வேளாண் சந்தைகளுக்கு 2 கோடி நிதியுதவி
01.02.2018| 11.30 am
மானிய உதவிகளை நேரடியாக மக்கள் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் மிக வெற்றி பெற்றுள்ளது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழும் மேலும் 8 கோடி வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும்.
01.02.2018| 11.27am
விவசாய கடன் இலக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மீன்வளம், கால்நடைத்துறைகள் உள்கட்டமைப்புகளுக்கு 11,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விவசாய விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். உணவு பதப்படுத்தும் துறைக்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
01.02.2018| 11.25 am
விவசாயிகள், மீனவர்களுக்கு கடன் அட்டை திட்டம் விரிவு படுத்தப்படும். விவசாய உள்கட்டமைப்பு ரூ. 22.000 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்படும்.
01.02.2018| 11.20 am
நாட்டின் உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இயற்கை விவசாயத்திற்கு இந்த அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இதற்காக விவசாயிகள் இணைந்து உருவாக்கும் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
01.02.2018| 11.14 am
8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதில் அரசு உறுதியாக உள்ளது. 2022ம் ஆண்டுக்குள் விவசாய வருமானத்தை இருமடங்காக உயர்த்த நடவடிக்கை. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு இந்த அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
01.02.2018| 11.13 am
எங்கள் அரசு முதல் மூன்று ஆண்டுகளில் 7.4 வளர்சி விகிதத்தை எட்டியுள்ளது. உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.
01.02.2018| 11.05 am
பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வரும் அருண் ஜேட்லி - படம்: ஏஎன்ஐ
01.02.2018| 10.55 am
பட்ஜெட் ஒளிபரப்புக்காக கூடியிருக்கும் செய்தியாளர்கள்
பட்ஜெட் தாக்கலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ள சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் தொடங்குகிறது.
01.02.2018 | 10.50 am
பட்ஜெட் குறித்த சந்தேகங்களுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று இரவு 7 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கிறார்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும்.
மேலும் இந்த அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு அளவிலான பட்ஜெட் இதுவாகும். 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment