சிவகங்கை ஊராட்சி ஒன்றியமா பொறுப்பேற்க பி.டி.ஓ.,க்கள் தயக்கம்
தினமலர் 7 hrs ago
சிவகங்கை:சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிய ஊரகவளர்ச்சித்துறையினர் தயக்கம் காட்டுவதால், பி.டி.ஓ., பணியிடம் காலியாக உள்ளது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ரெகுலர் பி.டி.ஓ.,வாக இருந்த பர்னபாஸ் அந்தோணி சமீபத்தில் கல்லலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் பிப்., 14 ல் கல்லல் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணியில் சேர்ந்தார். அதேசமயத்தில் தேசிய வேலையுறுதி திட்ட பி.டி.ஒ.,வாக இருந்த ராஜேஸ்வரி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நியமிக்கப்பட்டார்.பத்து நாட்களுக்கு மேலாகியும் அவர் பணியில் சேர தயக்கம் காட்டி வருகிறார். அப்பணியிடத்தை கிராம ஊராட்சி பி.டி.ஓ., கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் 'டெண்டர்,' சத்துணவு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஊரகவளர்ச்சித்துறையினர் கூறியதாவது: சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு செல்லும் சாலை மோசமாக இருந்தது. சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இச்சாலை கடந்த ஆண்டு நவம்பரில் டெண்டர் விடாமலேயே 12.01 லட்சம் ரூபாய்க்கு சீரமைக்கப்பட்டது.இதற்கு பணி முடிந்தபின் டெண்டர் விடப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஊராட்சி ஒன்றியம் அமைச்சரின் தொகுதிக்குள் வருகிறது. டெண்டர், சத்துணவு பணி, பசுமை வீடு ஒதுக்கீடு என, நெருக்கடி அதிகமாக உள்ளது.இதனால் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியவே பி.டி.ஓ.,க்களுக்கு தயக்கமாக உள்ளது, என்றனர்
No comments:
Post a Comment