Tuesday, February 27, 2018

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

By DIN | Published on : 27th February 2018 08:27 AM

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

நாகூர் தர்காவில் 461ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 17- ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. தர்காவில் இருந்து தாபூத்து எனப்படும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு புறப்பட்டது. ஊர்வலத்தை முன்னிட்டு பொதுமக்கள் சாலையோரங்களில் நின்று ஆண்டவரை வழிபட்டனர்.

சந்தன கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நாகூர் தர்காவை வந்தடைந்தது. பாத்தியா ஓதிய பின்னர், சந்தனக்கூட்டில் இருந்து ஹஜரத் ஒருவர் சந்தனக்குடத்தை தர்காவிற்குள் கொண்டு சென்று, தர்காவில் உள்ள நாகூர் ஆண்டவர் சமாதியில் தூஆ ஓதி சந்தனம் பூசப்பட்டது. நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...