Monday, February 26, 2018

ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் பங்கேற்க மும்பை செல்கிறார் ரஜினிகாந்த்

By DIN | Published on : 25th February 2018 08:08 PM |

சென்னை: துபாயில் மரணம் அடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின்(54) உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு மும்பை புறப்பட்டுச் செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ள நடிகை ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்படும். அதன்பின் ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் மாலை மருத்துவமனையில் இருந்து பெறப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், இதுவரை உடல் கூறு ஆய்வு அறிக்கை அளிக்கப்படாததால் அவரது உடலை சிறப்பு விமானம் மூலம் மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. துபாய் அரசின் வழக்கமான விதிமுறைகளை பின்பற்றி, ஸ்ரீதேவியின் உடலை விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நாளை திங்கள்கிழமை (பிப்.26) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு மும்பைக்கு செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...