Monday, February 26, 2018

16 வயதினிலே '-‛மயிலு' இனி நம் நெஞ்சில் : மலரும் நினைவலைகளில் திரையுலகினர், ரசிகர்கள் மட்டும் தான்

Added : பிப் 26, 2018 06:26



மதுரை: ''செந்துார பூவே... செந்துார பூவே... ஜில்லென்ற காற்றே... என் மன்னன் எங்கே... என் மன்னன் எங்கே... நீ கொஞ்சம் சொல்லாயோ... '' என, தன் பூவிதழ் புன்னகையால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அந்த 'மயிலு' இனி நம் மனதில் மட்டும் தான்... ஆம், சினிமா உலகில் அழகு தோகை விரித்து மயிலாய் பறந்த நடிகை ஸ்ரீதேவி மறைந்து விட்டார். அவரது நினைவலைகளில்   மிதக்கும் திரையுலகினர், ரசிகர்கள் கூறியதாவது:

ஸ்ரீதேவியை இந்தியில் அறிமுகம் செய்தேன் பாரதிராஜா, இயக்குனர்: நான் 1977ல் முதல் முறையாக ஸ்ரீதேவியை பார்த்தேன். அவர் குழந்தை நட்சத்திர மாக இருந்தவர். எதை சொன்னாலும் அதை உள்வாங்கி பிரதிபலிக்கும் சக்தி உள்ளவர். அவரை வைத்து மூன்று படங்கள் இயக்கி உள்ளேன். அந்த படங்களில் எல்லாம் அவரது சிரிப்பும், பார்வையும் நம் கண்ணை விட்டு நீங்காது. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு நிறைய பேர் சென்றிருந்தாலும், ஜெயித்து உச்சத்துக்கு போனவர் இவர் மட்டும் தான். நான் அவரை இந்தியில்அறிமுகம் செய்ததை பெருமையாக நினைக்கிறேன்.

 எங்களது கிராமத்தில் மயில் என்ற அழகான பெண் இருந்தார். நான் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, அவரது கேரக்டரில் சினிமா எடுக்க வேண்டும் என தோன்றும். அவரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான் '16 வயதினிலே' மயில். '16 வயதினிலே' படத்தை இந்தியில் எடுத்தேன். 'இந்தியில் நடிக்க மாட்டேன்' என கூறிய ஸ்ரீதேவியை சமாதானம் செய்து நடிக்க வைத்தேன். 'பாரதிராஜா தான் என்னை இந்தியில் அறிமுகப் படுத்தினார். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்' என அடிக்கடி கூறுவார். ஸ்ரீதேவி உச்சத்துக்கு போய் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மிகப்பெரிய நடிகை.உயர்ந்த போதும் எளிமையானவர்

கே.பாக்யராஜ், இயக்குனர்: தெற்கிலிருந்து வடக்கில் சென்று பல இந்தி படங்களில் நடித்து புகழ் உச்சிக்கு சென்ற போதும் கூட எளிமை யாகவே இருப்பார். திறமைசாலியான போதும் எல்லோருடனும் அன்பாக பழக கூடியவர். 'அவள் ஒரு தொடர்கதை' போன்ற கமல் நடித்த படங்களை, நான் சினிமா உலகிற்கு வருவதற்கு முன் பார்த்திருக்கிறேன். பாரதிராஜா இயக்கிய '16 வயதினிலே' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். 'சிவப்பு ரோஜாக்கள்' படத்திற்கு நான் கதை வசனம் எழுதினேன். அந்த படத்தில் என் வசனங்களை அழகாக உச்சரித்திருந்தார். அதற்கு பிறகு அவர் இந்திக்கு சென்றார்.சந்திக்கும் நேரங்களில் மரியாதை கொடுத்து பழகுவார். 'ஆக்ரி ரஷ்தா' இந்தி படத்தை நான் இயக்கியபோது அதில் அவர்தான் கதாநாயகி. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். '16 வயதினிலே' இந்தியில் 'ரீமேக்' செய்த போது அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அவ்வளவாக பேசப்படாத போதும் கூட தன் தளராத திறமையால் இந்தி படங்களில் நடித்து புகழ் கொடி நாட்டினார்.

இந்திய சினிமாவின் நிரந்தர ராணி : சிம்புதேவன், இயக்குனர்

ஸ்ரீதேவியின் இழப்பு சினிமாவுலகிற்கு பேரிழப்பு. அவர் ஒரு இயக்குனர், நடிகை. ஒரு கதாபாத்திரத்திற்கு இயக்குனர், தொழில்நுட்ப வல்லுனர்கள் செறிவூட்டினாலும் 85 சதவீதத்திற்கு தான் திரையில் கொண்டு வர முடியும். ஆனால் அதை நுாறு சதவீதம் தன் நடிப்பதால் திரையில் வெளிகாட்டியவர் ஸ்ரீதேவி. அதற்கு காரணம் அவரிடமிருந்த ஈடுபாடும், சினிமாகுறித்த ஆழ்ந்த அறிவும் தான். 'புலி' படம் குறித்து அவரிடம் கதையை நான் கூறிய போது, எழுந்து ராணி போல நடந்து காட்டினார். அந்தளவுக்கு கதையை தெரிவித்தவுடன் புரிந்து நடிப்பை வெளிப்படுத்திய அற்புத நடிகை. மேலும் இறுதி சண்டை காட்சிகளில் 'டூப்' போடாமல் ரோப் கட்டி நடித்து கொடுத்தார். அந்த படத்தில் கண்ணில் 'லென்ஸ்' அணிந்து நடித்த போது வலி ஏற்பட்டதாக, மூன்று நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் தெரிவித்தார். வலிக்காக மூன்று நாட்களுக்கு சிகிச்சை பெற்றார். அந்த அளவுக்கு சினிமாவில் ஈடுபாடு கொண்டவர். இந்திய சினிமாவின் நிரந்தர ராணி அவர். சினிமா இருக்கும் வரைக்கும் அவர் இருப்பார்.ஜாலியாக பேசுவார் ராதிகா, நடிகை, தயாரிப்பாளர்: என் தோழி ஸ்ரீதேவியின் மறைவு வேதனை அளிக்கிறது. மிகவும் அமைதி யானவர் யாரிடமும் பேச மாட்டார். ஆனால், என்னிடம் மட்டும் நிறைய விஷயங் களை ஜாலியாக பேசுவார். இருவரும் இணைந்து நடித்த 'போக்கிரி ராஜா' படப்பிடிப்பின் போது ஒரு நாள் ரஜினி, பாம்பு ஒன்றை எடுத்து வந்து எங்கள் முன் காட்டிய போது சிரித்துக் கொண்டே நாங்கள் ஓடியது இன்னும் நினைவில் இருக்கிறது. கடைசியாக அவரை 'புலி' படத்தில் நடிக்க சென்னை வந்த போதும், 'பத்மஸ்ரீ ' பட்டம் பெற்றதற்காக விருந்து கொடுத்தபோதும் சந்தித்தேன்.

ஸ்ரீதேவி பிரிவால் அதிர்ச்சி வடிவுக்கரசி, நடிகை: ஸ்ரீதேவியை எனக்கு 'சிவப்பு ரோஜாக்கள்'படத்தில் இருந்து தெரியும். தமிழகத்தில் சிவகாசியில் பிறந்து, வளர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வடநாட்டில் கனவு கன்னியாக வலம் வந்தவர். எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் நடித்து காட்டும் திறைமை உள்ளவர். சமீபத்தில் அவர் நடித்த 'இங்லீஷ் விங்லீஷ்' படத்தில் அவரது நடிப்பு ரொம்ப பிடித்தது. இப்படி ஒரு நடிகை தமிழகத்தில் இருந்தார் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இவ்வளவு சீக்கிரம் அவர் நம்மை பிரிந்து சென்றதை நினைக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.அழகுக்கு இலக்கணம் ஸ்ரீதேவிவிவேக், நடிகர்: இந்திய சினிமாவில் அழகு நடிகை ஸ்ரீதேவி. 1980களில் திருமணத்திற்காக பெண் பார்க்கும் இளைஞர்கள், தங்களுக்கு ஸ்ரீதேவி போல் அழகான பெண் வேண்டும் என ஆசைப்பட்டனர். அழகிற்கு வடிவமாக, இலக்கணமாக அவர் பார்க்கப்பட்டார்.

 எளிமையாக, அனைவரிடமும் எதார்த்தமாகவும் பழகும் குணம் கொண்டிருந்தார். அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது கிடைத்தபோது அவரிடம், 'உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்' என பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ''எனக்கு பிடித்தவர் நடிகர் விவேக்,'' என பதில் அளித்தார். இதுதெரிந்து என் நண்பர்களின் வாழ்த்து குவிந்து விட்டது. இதற்காக அவரது கணவர் போனி கபூரை தொடர்பு கொண்டு ''மேடத்திடம் நன்றி சொல்லிடுங்க,'' என தெரிவித்தேன்.சென்னையில் ஒருமுறை திரைத்துறை, நண்பர்கள் என தனக்கு நெருங்கிய 27 பேரை மட்டும் அழைத்து தாஜ் கோரமண்டல் ஓட்டலில் ஸ்ரீதேவி விருந்தளித்தார். அதில் நானும் ஒருவன். அதில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம். நான் செய்த பாக்கியம்.பணம், புகழ், அழகு, கவர்ச்சி, அந்தஸ்து இதெல்லாம் நிலையற்றது. முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்ய பழகிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஸ்ரீதேவியை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது.

50 வயதை கடந்தும் நடிப்பில் 'ஹிட்' கொடுத்தார். அவரது மரணம் இயற்கையின் சதி.அழகான குழந்தை முகம் கு.ஞானசம்பந்தன், பேராசிரியர்: குழந்தை நட்சத்திர மாக அறிமுகமாகி பெரிய நட்சத்திர மானவர். தென்னிந் தியாவில் இருந்து வட நாட்டில் புகழ் பெற்றவர்கள் ஹேமாமாலினி, வைஜெயந்தி மாலா, ஸ்ரீதேவி. குடும்பம், கணவர், குழந்தை என கிசுகிசுக்கு ஆளாகாமல் வாழ்ந்தவர். ஸ்ரீதேவி அழகான குழந்தை முகம் கொண்டவர். எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு குழந்தையாகவும், சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தவர். நாகேஸ்வரராவ் மற்றும் அவரது மகன் நாகர்ஜூனாவுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் நான் மும்பை சென்று வரும் போது அவரை பார்த்தேன்; மிகவும் மெலிந்து இருந்தார்.

 இது குறித்து கமலிடம் பேசும் போது அவர் 'டயட்'டில் இருப்பதாக கூறினார்.இயக்குனர்களின் நம்பிக்கை ராஜா, பட்டிமன்ற பேச்சாளர், நடிகர்: 1970களில் இளைஞர் களின் கனவு கன்னியாக இருந்தவர். நடிப்பு துறையில் நீண்ட காலம் வெளிச்சத் தில் இருந்தார். கொஞ்ச காலங்களில் காணாமல் போகும் நடிகைகள் மத்தியில் நீண்ட காலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். தமிழில் இருந்திருந்தால் இந்தளவிற்கு தேசிய அங்கீகாரம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். 'வறுமையின் நிறம் சிவப்பு' அவரது நடிப்பிற்கு கிடைத்த சிறப்பு. எந்த கேரக்டர் கொடுத்தாலும் ஸ்ரீதேவி நன்றாக நடிப்பார் என்ற நம்பிக்கை இயக்குனர்களுக்கு இருந்தது.கர்வமில்லா அழகு நடிகை எஸ்.மாலா ராஜா, ரசிகை, மதுரை: நான் அவரது தீவிர ரசிகை. '16 வயதினிலே' படத்தை குடும்பத் து டன் ரசித்திருக் கிறோம். மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி நடன திறன் உள்ளவர். உலகளவில் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்தவர்.

 இவரும், கமலும் நடித்த படங்களில் ஜோடி பொருத்தம் அற்புதமாக இருக்கும். 'மூன்றாம் பிறை' படத்தில் அவரது குழந்தைதனமான நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும். இத்தனை அழகு இருந்தும், கர்வம் இல்லாத நடிகையாக வாழ்ந்தவர். கண்களிலிருந்துஅகலாத நாயகி-ஓ.எஸ்.மாலதி, குடும்பத்தலைவி, மதுரை: இன்று எவ்வளவோ கதாநாயகிகள் வந்தாலும் கூட ஸ்ரீதேவியை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. அவர் கண்களை விட்டு அகலாத கதாநாயகி. அந்தளவுக்கு ஒவ்வொரு படங்களிலும் மிகச்சிறந்த நடிப்பால் பெண்களை கவர்ந்தவர். அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். கடைசியான 'மாம்' படம் மட்டுமே பார்க்கவில்லை. மேலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடைஉடை, பாவனை, நடனத்தில் அவரை யாரும் மிஞ்சமுடியாது. அவரது மறைவு ரசிகர்களுக்கு பெரிய இழப்பு. சினிமா உள்ளவரை அவரது புகழ் நிலைத்துஇருக்கும்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...