Monday, February 26, 2018

புதிய துணைவேந்தர் யார்? : தேடல் குழு இன்று ஆலோசனை

அண்ணா பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக்கான, தேடல் குழுவின் கூட்டம், சென்னையில், இன்று நடக்கிறது. அண்ணா பல்கலையில், ஒன்றரை ஆண்டுகளாக, துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவரை நியமிக்க, இரண்டு முறை தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மூன்றாவது தேடல் குழு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு சார்பில், புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இறுதி பட்டியலுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான, தேடல் குழுவின் கூட்டம், சென்னையில், இன்று நடக்கிறது.

இந்த கூட்டத்தில், தேடல் குழு தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர்; ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சுந்தரதேவன் மற்றும் ஐ.ஐ.டி., பேராசிரியர் ஞானமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். இரண்டு நாட்கள் நடக்கும் கூட்டத்தில், புதிய துணைவேந்தர் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...