Tuesday, February 27, 2018

பெண்களுக்குத்தான் இனி இருக்கை ஒதுக்கீட்டில் முன்னுரிமை: ரயில்வே முக்கிய அறிவிப்பு

Published : 26 Feb 2018 14:58 IST

பிடிஐ புதுடெல்லி



ரயிலில் மகளிர் பிரிவின் கீழ் நிரப்பப்படாத படுக்கைகள், இருக்கைகளை, காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மகளிருக்கு முதலில் ஒதுக்கீடு செய்துவிட்டு, அதன்பின் மூத்த குடிமக்களுக்கு அளிக்க வேண்டும் என ரயில்வே புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது, உள்ளமுறையின்படி, முன்பதிவு பட்டியல் அறிக்கை தயாரிக்கும் வரை, “கோட்டா” முறை டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், நிரப்பப்படாத இருக்கைகள், படுக்கைகள், காத்திருப்பில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது, அதிலும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி ரயில்வே வாரியம் அனைத்து மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, மகளிர் பிரிவின் கீழ் நிரப்பப்படாத இருக்கைகளை எப்படி நிரப்ப வேண்டும் என்பது குறித்து புதிய வழிகாட்டி முறைகளை வகுத்துள்ளது.

அதன்படி, ரிசர்வேஷன் சார்ட் தயாரித்தபின், மகளிர் பிரிவின்கீழ் நிரப்பப்படாமல் இருக்கும் படுக்கைகள், இருக்கைகளை முதலில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பெண் பயணிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன்பின், மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை படுக்கையோ அல்லது, இருக்கையிலோ பயணிகள் பயணிக்காமல் காலியாக இருந்தால், படுக்கை அல்லது இருக்கையை எந்த பெண் பயணிக்கும், அல்லது மூத்த குடிமக்களுக்கும் டிக்கெட் பரிசோதகர் ஒதுக்கலாம்.

தற்போதுள்ள நிலையில் அனைத்து ரயில்களிலும் ஏசி 3அடுக்கு, ஏசி 2அடுக்கு உள்ளிட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில், மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு முறையில் அளிக்கலாம் என்ற முறை இருக்கிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...