மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் : அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
Added : பிப் 27, 2018 01:07
மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பான அவமதிப்பு வழக்கில், தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி, உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதன்படி, எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை தனி நீதிபதி ரத்து செய்தார். ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், 'தகுதி, திறமை, பணி மூப்பு அடிப்படையில் மறு பரிசீலனை செய்து சுகாதாரத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். ரேவதி தாக்கல் செய்த மனுவில், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் மீது நீதிமன்றஅவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது.

No comments:
Post a Comment