Tuesday, February 27, 2018

விழுப்புரம் தபால் ஆபீசில் 'பாஸ்போர்ட்' சேவை மையம்

Added : பிப் 27, 2018 02:10

விழுப்புரம் தபால் அலுவலகத்தில், மார்ச் முதல், பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. இது குறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, சேலம், வேலுார் மற்றும் காரைக்கால் தலைமை தபால் அலுவலகங்களில், ஏற்கனவே, பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு, பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால், இன்று, கடலுார் தபால் அலுவலகத்திலும், மார்ச்சில், விழுப்புரம் தபால் அலுவலகத்திலும், பாஸ்போர்ட் சேவை மையம் திறக்க திட்டமிட்டுள்ளோம். விழுப்புரம் தபால் அலுவலகத்தில், புதிய பாஸ்போர்ட் சேவையை பயன்படுத்த, நாளை முதல் பதிவு செய்யலாம். இதற்கு, www.passportindia.gov.in என்ற, இணையதளத்திற்கு சென்று, பயனாளி அடையாள எண் மற்றும், 'பாஸ்வேர்டு' உருவாக்கிக் கொள்ள வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணத்தை செலுத்தி, நேர்முக தேர்வுக்கான நேரத்தை பெற வேண்டும். பின், நேர்முகத்தேர்வு நேரத்திற்கு, கட்டணம் செலுத்திய ரசீது, அனைத்து அசல் சான்றுகள் மற்றும் இரண்டு புகைப்படங்களுடன் நேரில் செல்ல வேண்டும்.விழுப்புரத்தை அடுத்து, திருவண்ணாமலை, விருதுநகர், நாகர்கோவில், ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் தேவக்கோட்டை தபால் அலுவலகங்களிலும், பாஸ்போர்ட் சேவை மையங்கள், அடுத்தடுத்து திறக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...