Sunday, February 25, 2018

போலி பஸ் பாஸ் எம்.டி.சி.,யில் அதிகரிப்பு

Added : பிப் 24, 2018 19:41

  சென்னை, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில், போலி பஸ் பாஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், பயண தொலைவுக்கேற்ப, வெவ்வேறு தொகைகளில், மாதாந்திர பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மேலும், விருப்பம் போல் பயணிக்கும் வகையில், 1,000 ரூபாய் பஸ் பாசும் வழங்கப்படுகிறது.
தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு, பாதி விலையில், பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்நிலையில், போலி பஸ் பாஸ்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, போக்குவரத்து
செயலருக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் நடத்துனர்கள், பயணியரின் பஸ் பாசை வாங்கி, சரிபார்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு வாரமாக நடந்த ஆய்வில், நிறைய மாணவர்களும், பயணியரும், பழைய பஸ் பாசில், ஆண்டு, மாதத்தின் பெயரை மாற்றியும், புகைப்படத்தை மாற்றியும், முறைகேட்டில் ஈடுபடுவது தெரிந்தது.
அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரிப்பதோடு, பள்ளி, கல்லுாரி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கின்றனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உள்ள, பஸ் பாசை பறிமுதல் செய்து, உரிய அபராதம் வசூலிக்கின்றனர்.அதே நேரம், நடந்துனருக்கு, பயணியின் இருக்கைக்கு சென்று, டிக்கெட் கொடுக்க வேண்டும்; பயணியருக்கு, இறங்கும் இடத்தை உரக்கச் சொல்லி, இறக்கி விட வேண்டும் எனவும், ஓட்டுனருக்கு, பேருந்துகளை சரியான இடத்தில், ஓரமாக நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
பயணியர், பேருந்து நடைகளை சோதனை செய்யாத அதிகாரிகள், பேருந்தில் உள்ள குறைகள், நடத்துனர், ஓட்டுனர் குறித்த புகார்களை, 94450 30516 என்ற எண்ணில், தெரிவிக்கலாம்.

புகார் அளிக்கும் போது, பேருந்தின் பக்கவாட்டு எண், வழித்தட எண், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...