Sunday, February 25, 2018

 இது ஜெ., சிலை தானா'
Added : பிப் 24, 2018 23:31 |




அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று ஜெயலலிதாவின் முழு உருவச்
சிலை திறக்கப்பட்டது. அந்த சிலை ஜெ., உருவ அமைப்புடன் ஒத்துப் போகவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஜெ., பிறந்த நாளை ஒட்டி அவரது முழு உருவ வெண்கல சிலை நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இந்த சிலையை பிரசாத் என்ற சிற்பி வடிவமைத்திருந்தார்.அவருக்கு அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பொன்னாடை போர்த்தினார். இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மோதிரம் அணிவித்து பாராட்டினார். ஆனால், ஜெ., சிலையை பார்த்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏனெனில் ஜெ., முக சாயல் சிலையில் இல்லை. மேலும், சிலை அதிக அகலம் உடையதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிலை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே 'இது, ஜெ., சிலை அல்ல' என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
மறைந்த நடிகை காந்திமதி போல இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் வளர்மதி
சாயலில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகின்றன. மற்றொரு
தரப்பில், 'ஜெ.,க்கு பதிலாக சசிகலாவுக்கு சிலை வைத்து விட்டனர்' என்றும் கேலி செய்யப்படுகிறது. - நமது நிருபர்

No comments:

Post a Comment

‘High oxytocin doses one of the reasons for mom death’

‘High oxytocin doses one of the reasons for mom death’  Three Still In Critical Condition  Sarthak Ganguly & Sujoy Khanra  TNN  15.01.20...