Sunday, February 25, 2018

 ராஜபாளையத்தில் மார்ச் 31-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை
 
ராஜபாளையம் நகராட்சி பகுதியில் மார்ச் 31-ந் தேதிக்குள் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.
ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி உள்ளிட்டவை எக்கச்சக்கமாக உயர்த்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் மக்களின் பொருளாதார நிலை உயர்வுக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் (மார்ச்) 31- ந் தேதிக்குள் வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள் ஆகியவற்றை மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஏப்ரல் முதல் வரி கட்ட தவறும் கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும், மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர்குழாய் இணைப்புகள் துண்டிப்பு செய்வதுடன் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

‘High oxytocin doses one of the reasons for mom death’

‘High oxytocin doses one of the reasons for mom death’  Three Still In Critical Condition  Sarthak Ganguly & Sujoy Khanra  TNN  15.01.20...