Wednesday, February 21, 2018

அரசின், 'இ - சேவை' : 2,100 மையங்கள் ஆர்வம்

Added : பிப் 21, 2018 01:03

அரசின், 'இ - சேவை'களை, தங்களின், இன்டர்நெட் மையங்களில் வழங்க அனுமதி கோரி, 2,100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும், 10 ஆயிரம், இ - சேவை மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், மெத்தனமாக செயல்படுவதாகவும், மக்களை அலைக்கழிப்பதாகவும் புகார்கள் வருகின்றன.இவற்றின் செயல்பாடு, தாலுகா, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களை போல, மந்தமாக மாறி விட்டதாகவும் கருத்து நிலவுகிறது. அதனால், இ - சேவை மையங்களை மூடி விட்டு, தனியார் இன்டர்நெட் மையங்களுக்கு, அந்த வாய்ப்பை வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தனியார் இன்டர்நெட் மையங்களுக்கு, இ - சேவைகளை வழங்குவதற்கான உரிமம் வழங்க, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், ஜனவரி மாத இறுதி வாரத்தில் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறது. இதற்கு, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: அரசின், இ - சேவைகளை, தங்களின் இன்டர்நெட் மையங்களில் வழங்க அனுமதி கோரி, அந்த மையங்களைச் சேர்ந்த, 2,120 பேர், இதுவரை விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பங்கள் வந்தபடி உள்ளன; அவற்றை பரிசீலித்து வருகிறோம். விண்ணப்பங்களை அனுப்புவோர், வரும், 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பரிசீலனைக்குப் பின், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தமிழ்நாடு மின் ஆளுகை நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தால், மக்களுக்கு அரசின் சேவைகளை அளிப்பதில், கடும் போட்டி ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024