Wednesday, February 21, 2018

பட்ஜெட்டில் உபரி தொகையை மக்களுக்கு அளிக்கிறது சிங்கப்பூர்

Updated : பிப் 21, 2018 05:29 | Added : பிப் 21, 2018 02:58



சிங்கப்பூர் : சிங்கப்பூரின் இந்தாண்டு பட்ஜெட்டில், அதிகமாக உள்ள உபரி நிதியை, அனைத்து மக்களுக்கும், போனசாக பகிர்ந்து அளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, சிங்கப்பூரில், இந்தாண்டு பட்ஜெட்டில், 4.8 லட்சம் கோடி ரூபாய் உபரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.1 சதவீதம். 2017 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முந்தைய ஆண்டை விட, 0.4 சதவீதம் அதிகம்.

இதையடுத்து, உபரி நிதியை, 21 வயது பூர்த்தியான, அந்நாட்டு குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க, சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை, சிங்கப்பூர் நிதியமைச்சர், ஹெங் ஸ்வீகீட், நேற்று அறிவித்தார்.

இதன்படி, ஆண்டு வருமானம், 13.75 லட்சம் ரூபாய் வரை உள்ளோருக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் போனசாக வழங்கப்படும்; 13.75 லட்சம் ரூபாய்க்கு மேல், 50 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வருமானம் உள்ளோருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் போனஸ் தரப்படும். அதற்கு மேல் வருவாய் உள்ளோருக்கு, தலா, 5,000 ரூபாய் போனசாக கிடைக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024