தனலட்சுமி சீனிவாசன் குழுமம் ரூபாய், 461 கோடி வரி ஏய்ப்பு
Added : பிப் 21, 2018 01:41தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 461 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பலுாரில் இயங்கும், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்திற்கு, திருச்சி மாவட்டம், சமயபுரம்; காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில், கல்லுாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், பிப்., 15 முதல், வருமான வரி சோதனை நடந்து வந்தது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை, வருமான வரித்துறையினர், ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறியதாவது: தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களில் நடந்து வந்த சோதனையில், அதிக அளவில், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும், சில முறைகேடுகள் நடந்துள்ளன. பினாமிகள் பெயரிலும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதுவரை, நடந்துள்ள ஆய்வில், அக்கல்வி குழுமத்தில், 461 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment