Wednesday, February 21, 2018

மதுரை விமானத்தில்தங்க பிளேடு பறிமுதல்

Added : பிப் 21, 2018 01:53





மதுரை: துபாயில் இருந்து மதுரைக்கு நேற்று வந்த விமானத்தில், தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. விமான பயணியரிடம் சோதனை செய்ததில், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அபுதாகிர், 30, என்பவரிடம், 'சேவிங் பிளேடு' டப்பாவில் பிளேடு வடிவில், எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 259 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர். சமீபகாலமாக, மதுரை விமான நிலையத்தில், கடத்தல் தங்கம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஜன., 16ல், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியின் காலுறையில், 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024