Tuesday, February 13, 2018

இ - சேவை' மையங்களில் 'பிளாஸ்டிக் ஆதார்' நிறுத்தம்

Added : பிப் 13, 2018 00:29

சென்னை: அரசு நடத்தும், 'இ - சேவை' மையங்களில், 'பிளாஸ்டிக் ஆதார்' அட்டை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் நடத்தும், இ - சேவை மையங்களில், அசல் நிரந்தர, ஆதார் அட்டைக்கு மாற்றாக, 30 ரூபாய் கட்டணத்தில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்குவதை தடை செய்துள்ளது.எனவே, அரசின் இ - சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை நிறுத்தப்படுகிறது. ஆதார் அட்டை யின் நகலை, 12 ரூபாய் கட்டணத்தில், காகித தாளில், பொதுமக்களுக்கு அச்சிட்டு வழங்கும் சேவை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...