Tuesday, February 13, 2018

தக்காளிக்கு கை கொடுத்தது சிங்கப்பூர்

Added : பிப் 13, 2018 01:18 



  வடமதுரை: சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் வந்துள்ளதால், அய்யலுார் மார்க்கெட்டில் தக்காளி கொள்முதல் விலை சற்று உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலுார், கோபால்பட்டி, ஒட்டன்சத்திரம் உட்பட பல பகுதிகளிலும் தக்காளி சாகுபடியாகிறது. முதலீடு, பராமரிப்பு செலவு குறைவு, லாபம் தரக்கூடிய பயிர் என்பதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் அதை பயிரிடுகின்றனர்.சில நேரங்களில் கடும் விலை வீழ்ச்சி அடைந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் விலை உச்சத்திற்கு சென்று லாபம் பார்க்க முடிவதால் மனம் தளராமல் தொடர்ந்து தக்காளி பயிரிடுகின்றனர். கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து, 15 கிலோ வீரிய ரக தக்காளி பெட்டி, 40 ரூபாய்க்கே விலை போனது. எடுப்புக்கூலி, போக்குவரத்து செலவினங்களுக்கு கூட கட்டுப்படியாகாத நிலையில் செடியில் பறிக்காமலேயே தவிர்த்தனர்.

சிங்கப்பூர் ஏற்றுமதி : இந்நிலையில், சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு ஆர்டர் கிடைத்து, விலை சற்று உயர்ந்துள்ளது. அய்யலுார் மார்க்கெட்டில் கடந்த இரு நாட்களாக பெட்டி, 70 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை ஏலம் போனது. இது குறித்து, கமிஷன் மண்டி நிர்வாகிகள் கூறுகையில்,'சிங்கப்பூர் ஏற்றுமதி ஆர்டருடன் வந்திருந்த வியாபாரிகளால் விலை சிறிது உயர்ந்துஉள்ளது. 'விலை குறைவால் விரக்தியில் இருக்கும் விவசாயிகளுக்கு, இது சற்று ஆறுதலை தந்துஉள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...