கார்டுதாரர் வந்தால் தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்
Added : பிப் 15, 2018 00:34
ரேஷன் கார்டில் உள்ள நபர்கள் வந்தால் மட்டுமே, உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என, கடை ஊழியர்களை, உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், மற்ற பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது. அரிசி கார்டு வைத்து இருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவது இல்லை. சிலர், வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம், தங்களின் ரேஷன் கார்டை வழங்கி, பொருட்களை வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர். ஏற்கனவே, வீட்டில் வேலை பார்ப்பவர்கள், தங்களின் ரேஷன் கார்டில் பொருட்களை வாங்கு வதால், மிகுதியாக உள்ள அரிசியை, மளிகை வியாபாரிகள், ஓட்டல் போன்றவற்றில் விற்பனை செய்கின்றனர்.
பயோ மெட்ரிக் : மத்திய அரசு, ரேஷன் கடைகளில், விரல் ரேகை பதிவு எனப்படும், 'பயோமெட்ரிக்' வாயிலாக, பொருட் களை வினியோகம் செய்யுமாறு, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, 40 கோடி ரூபாய் செலவில், பயோமெட்ரிக் திட்டத்தை செயல்படுத்த, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு, தமிழக நிதித்துறை, நிதி ஒதுக்காமல் உள்ளதால், அந்த பணிகள் துவங்கப்படவில்லை.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரிசி கார்டு வைத்திருப்பவர்கள், பொருட்கள் வாங்க விருப்பமில்லை எனில், பொது வினியோக திட்ட இணையதளம், 'மொபைல் ஆப்' என்ற செயலி வாயிலாக, அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதி உள்ளது. ஆனால், பொருட்கள் வாங்காத பலரும், அந்த சேவையை பயன்படுத்தாமல், யாருக்கோ தங்களின் பொருட்களை வழங்குகின்றனர். இதனால், ரேஷன் முறைகேட்டை தடுப்பது சிரமமாக உள்ளதுடன், அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.கார்டுக்கு உரிய நபர்கள் வந்தால் மட்டுமே, பொருட்களை வழங்கும் படி, ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை யாரும் பின்பற்றுவதில்லை; அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. ரேஷன் கடைகளில், பயோமெட்ரிக் கருவி வழங்கினால், கார்டில் உள்ள உறுப்பினர்கள் வந்து, விரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே, பொருட்கள் வழங்க முடியும்.
எச்சரிக்கை : பயோமெட்ரிக் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவில்லை எனில், அரிசி உள்ளிட்டவைக்கு வழங்கும் மானியத்தை நிறுத்த போவதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால், விரைவில், பயோமெட்ரிக் திட்டம் வருவது உறுதி. இதற்காக, ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள், கட்டாயம் கடைக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என, கடை ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment