Thursday, February 15, 2018

அனிதா குப்புசாமி திடீர் விலகல்

Added : பிப் 15, 2018 02:11

சென்னை: அ.தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக இருந்த, பிரபல நாட்டுப்புறப் பாடகி, அனிதா குப்புசாமி, நேற்று, அ.தி.மு.க.,விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அ.தி.மு.க.,வில் இருந்து, அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன். ஜெ., வற்புறுத்தி அழைத்ததால், அ.தி.மு.க.,வில் இணைந்தேன்; ஜெ., இல்லாததால் விலகி விட்டேன். எனக்கு, தற்போது இருப்பவர்களின் தலைமை பிடிக்கவில்லை.தற்போதைய முதல்வர், மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. கருணாநிதி, ஜெ., போல், மக்களுக்காக எதையும் செய்யவில்லை. பிற கட்சியில் இணையும் எண்ணம் இல்லை. அரசியலில் இருந்து விடுபட்டால் போதும் என, நினைக்கிறேன்.என் கணவருக்கு, அரசு இசைக் கல்லுாரி துணைவேந்தர் பதவி கிடைக்காததற்கும், நான், அ.தி.மு.க.,விலிருந்து விலகுவதற்கும், எந்த சம்பந்தமும் கிடையாது.என் கணவருக்கு, துணைவேந்தர் பதவி கேட்டது உண்மை. ஆனால், அது தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன், கட்சியிலிருந்து விலகுவதாக, என் முகநுாலில் அறிவித்தேன். அது, பலருக்கும் தெரியாததால், தற்போது, வெளிப்படையாக அறிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024