Sunday, February 11, 2018

இனி தனி ஒருவருக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது!

இனி தனி ஒரு நபருக்கு ரேஷன் பொருட்கள்   கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளில் இலவசமாகப் பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகிக்கப்படுகின்றன. அதேபோல், சர்க்கரை, கோதுமை, சிலிண்டர் இல்லாதவர்களுக்கு 5 லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு சிலிண்டர் உள்ளவர்களுக்கு 2 லி மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், ஒரு நபர் மட்டுமே உள்ள ரேஷன் கார்டுகளுக்கு 10 நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டாம் என தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கடந்த மூன்று நாட்களாக ரேஷன் கடையில் ஒரு நபர் ரேஷன் கார்டுகளுக்குப் பொருட்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, அவரின் குடும்ப உறுப்பினரின் விவரம் உள்ளிட்டவை தாசில்தார் அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டுவருகின்றன. இதனால் ஒரு நபர் கார்டு வைத்துள்ள ஆதரவற்றோர் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரேஷனில் 13 ரூபாய் 50 காசு விலையில் வழங்கப்பட்டு வந்த சர்க்கரை விலையை 25 ரூபாயாகத் தமிழக அரசு உயர்த்தியது. 2017 நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து,ரேஷன் கார்டுக்கு 70 சதவீதம் புழுங்கல் அரிசியும், 30 சதவீதம் பச்சரிசியும் விநியோகிக்கத் தமிழக அரசு அறிவுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...