Sunday, February 11, 2018

ரிசர்வ் வங்கியின் பெயரில் போலி இணையதளம்: பொதுமக்கள் வங்கி கணக்கு விவரங்களை திருட முயற்சி

Published : 09 Feb 2018 10:40 IST

மும்பை



வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை குறித்த விவரங்களை கேட்டுப் பெறும் ரிசர்வ் வங்கியின் போலி இணையதளம் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:

‘‘ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் போல, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் போலியான இணையதளம் செயல்பட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்களிடம் இருந்து வங்கிக் கணக்குகள் மற்றும் விவரங்கள் கேட்கப்படுகின்றன. ஆன்லைனில் வங்கிக் கணக்கு விவரங்களை உறுதி செய்வதாக அந்த இணையதளம் தெரிவித்து தகவல்களைப் பெறுகிறது. இதுகுறித்த விவரம் தெரியாத பொதுமக்கள் பலர் தங்கள் விவரங்களை தெரிவித்து ஏமாறும் நிலை ஏற்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை ஒத்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், அதே இணையதள முகவரியை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தனி மனிதர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலையும் ரிசர்வ் வங்கி இதுவரை கேட்கவில்லை. எனவே இதுபோன்ற போலி இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு இணையதளத்திற்கும் தங்கள் தகவல்களை பொமக்கள் பதிவிட வேண்டாம்" எனக்கூறியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டும் இதுபோன்று ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகள் பெயரில் போலி மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு தகவல் திருட்டு நடைபெற்றது. அதுபோலேவே வேறு வங்கிகளின் பெயரில் போலி கிரெடிட் கார்டுகளும் வலம் வந்தன. அப்போது ரிசர்வ் வங்கி, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025