ஆவணங்கள் இன்றி விமான பயணம்
Added : அக் 05, 2018 01:13
புதுடில்லி:விமான பயணியர், 'பேஷியல் பயோமெட்ரிக்' எனப்படும், முக அடையாள அங்கீகார பதிவு முறையை பயன்படுத்தி, விமான நிலையத்திற்குள் நுழையும் வசதி, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
விமான பயணியர், பயணச் சீட்டுடன், தங்கள் அடையாள அட்டையை அதிகாரிகளிடம் காண்பித்த பின்பே, விமான நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், மத்திய அரசின், 'டிஜி யாத்ரா' திட்டத்தின் கீழ், ஆவணங்கள் இன்றி, 'பேஷியல் பயோமெட்ரிக்' முறையை பயன்படுத்தி, விமான நிலையத்திற்குள் நுழையும் முறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, சுரேஷ் பிரபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:அடிக்கடி விமான பயணம் செய்வோர், தங்கள் பெயர் மற்றும் இதர விபரங்களை, தகுந்த ஆவணங்களுடன், 'ஆன்லைன்' வாயிலாக, ஒருமுறை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு, நிரந்தர அடையாள குறியீடு வழங்கப்படும்.அதன் பின், ஒவ்வொரு முறையும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, 'டிஜி யாத்ரா' அடையாள குறியீட்டை குறிப்பிட வேண்டும். இதில், ஏற்கனவே பயணியரின் விபரங்கள் பதிவாகி இருப்பதால், விமான நிலைய வாயிலில், ஆவணங்கள் எதையும் காண்பிக்காமல், முக அடையாள அங்கீகாரப் பதிவு மூலம், விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.
இந்த திட்டம், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல், பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையத்தில், சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வருகிறது. பின், கோல்கட்டா, வாரணாசி, புனே மற்றும் விஜயவாடா விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment