Friday, October 5, 2018

ரூ.100க்கு குடை கூவிக்கூவி விற்பனை 

Added : அக் 05, 2018 06:24

பண்ருட்டி, 

பண்ருட்டி பகுதியில் பலத்த மழை துவங்கியதால் 100 ரூபாய்க்கு கூவி, கூவி குடைகளை விற்பனை செய்தனர்.பண்ருட்டி பகுதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் 2:00 மணிக்கு துவங்கிய மழை மாலை 5:00 மணிவரை நீடித்தது. பின் இரவு 9:00 மணிக்கு துாரல்களுடன் துவங்கிய மழை நள்ளிரவு 1:30 மணிக்கு பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.இந்நிலையில் மழை காரணமாக பண்ருட்டி கடலுார் சாலையில் குடை விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை குடைகளை கூவிக்கூவி விற்பனை செய்தனர். ஏராளமானோர் குடைகளை வாங்கிச் சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024