Friday, October 5, 2018

பழநியில் கனமழை: வெறிச்சோடிய கோயில்

Added : அக் 05, 2018 02:42


பழநி:பழநியில் நேற்று பகல் முழுவதும் கன மழை பெய்ததால், மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது. பக்தர்கள் வருகை குறைவால் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை நேற்று மதியம் 3:30 மணி வரை நீடித்தது. இதனால் திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடுகளில் குளம்போல் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. மலைக்கோயில் ரோப் கார் மழையால் நிறுத்தப்பட்டு குறைந்த நேரமே இயக்கப்பட்டது. படிப்பாதை, யானைப்பாதையில் ஆறுபோல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.பாதவிநாயகர் கோயில், சன்னதி வீதிகளில் பக்தர்கள் வருகை குறைவால் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டு வெறிச்சோடி கிடந்தன. மழையால் பொதுமக்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024